தமிழ்நாடு

தஞ்சையில், பல்வேறு போட்டிகளில் வென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு- கலெக்டர் வழங்கினார்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்று த்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்ப ரிசுகள் மற்றும் சான்றிதழினை வழங்கி பாராட்டினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் விதமாக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதியை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அறிவித்தது. இதனை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பொருட்டு அந்நாளில் ஊதா நிறத்தில் முக்கிய கட்டிடங்களில் ஒளியூட்டி பிற நாடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் இத்தகைய நிகழ்வின் மூலம் கொண்டு செல்ல இயலும்.

இந்தியாவில் முதல் முறையாக நமது தமிழ்நாட்டிலும் இவ்விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2 நாட்கள் தமிழ்நாடு அரசின் அனைத்து முக்கிய அலுவலகங்களையும் ஊதா நிறத்தில் ஒளியூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஆட்சியர் அலுவலக பணியாளர்களையும் ஊதா நிறப்பட்டை அணிந்து, மாற்றுத்தி றனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரெங்கராஜன், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் சாமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button