செய்திகள்தமிழ்நாடு

நெல்லின் ஈரப்பதத்தை உலர்த்தும் நவீன இயந்திரம் சோதனை ஓட்டம் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அறுவடை செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருந் தால், அந்த நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுவ தில்லை. இதனால், விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு, முன்னோடி விவசாயிகள் ஒன்றி ணைந்து, நெல் உலர்த்தும் நவீன இயந்திரத்தை, ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் வடிவமைத்து, சோதனை முயற்சிக்காக தஞ்சாவூர் மாவட்டம் பொன்னப்பூர் கிழக்கு கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நிறுவி உள்ளனர்.

இந்நிலையில், நெல் உலர்த்தும் நவீன இயந்திரம் நேற்று சோதித்து பார்க்கப்பட்டது. அதன் சோதனை இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், வேளாண் இணை இயக்குநர் ஏ.ஜஸ்டின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் சிற்றரசு மற்றும் முன்னோடி விவ சாயிகளான பி.ஆர்.பாண்டியன், கணபதிஅக்ரஹாரம் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

பின்னர், ஆட்சியர் கோவிந்த ராவ் செய்தியாளர்களிடம் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் வழக்கமாக 27 மிமீ அளவுக்கு மழை பெய்யும். ஆனால், நிகழாண்டு 295 மிமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பையன், கடந்த 4 நாட்களாக ஆய்வு செய்துள்ளார். பாதிக்கப் பட்டுள்ள விவசாயிகளுக்கு எந்த வகையில் தமிழக அரசு சார்பில் உதவி செய்ய முடியும் என அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலாவதாக நெல் ஈரப்பதத்தை குறைக்கும் வகையிலான நெல் உலர்த்தும் நவீன இயந்திரம் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தை வடிவமைக்க முன்னோடி விவசாயிகள் பலர் சேர்ந்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். இந்த இயந்திரத்தின் கொள்ளளவு 2 டன் அளவு உள்ளது. இந்த இயந்திரத்தில் 2 மணிநேரத்தில் 24 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை, 18 சதவீதம் ஈரப்பதத்துக்கு குறைக்க வாய்ப்புள்ளது. இந்த சோதனை ஓட்டம் முழுமையாக வெற்றியடைந்தால், இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இயந்தி ரத்தை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தும் வகையில், படிப்படியாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி எடுக்கப்படும் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button