தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி அறிமுகம்..!!

ரேஷன் கடைகளில் யூபிஐ (UPI) வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதன்படி தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் (G-Pay, Paytm) போன்ற யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாய விலைக்கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படிப்படியாக அனைத்து ரேசன் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும், நியாய விலை கடைகளில் 2 கிலோ, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button