செய்திகள்தமிழ்நாடு

சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் – தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:& உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர் துறையின் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ், முதல்&அமைச்சர் தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

மேலும், குறை தீர்ப்புப் பிரிவு, மின் ஆளுமை ஆகியவற்றின் சிறப்பு அதிகாரியாகவும் மறு உத்தரவு வரும் வரை ஷில்பா பிரபாகர் சதீஷ் பதவி வகிப்பார். செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் அலுவல் சாரா துணை செயலாளருமான வி.பி.ஜெயசீலன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button