தமிழ்நாடு

ஒட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவரின்4 ஆண்டு சாதனை..! : விருது வழங்குவாரா மாவட்ட ஆட்சியர்..?

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சி குறித்து தொடர்ந்து நமக்கு புகார்கள் வருகின்றன. நாமும் பத்திகை தர்மம் காத்து சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல் நேர்மையாக செய்தி வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில் தற்போது நமக்கு வரப்பட்டிருக்கும் புகார் குறித்து பார்ப்பதர்க்கு முன்னால் R.ராஜாக்கண்ணு ஒட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவரின் மீது வந்த புகார் சாதனை பட்டியல்..!

  1. ஒரு தூய்மை காவலர் ஊராட்சி மன்ற தலைவரோடு திருமண விழாவில் சமமாக அமர்ந்து சாப்பிட்டதற்காக எப்படி என்னோடு சமமாக அமர்ந்து சாப்பிட்டாய் என்று அவமானமாக பேசி அடிக்க பாய்ந்தது.
  2. 100 நாள் வேலையில் பணிதள பொறுப்பாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் வரை சென்றதை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஊராட்சி மன்ற தலைவர் 100 நாள் வேலை திட்டத்தில் பணிதள பொறுப்பாளர்களை மாற்றாமல் தொடர்ந்து 4 ஆண்டுகளாக அதே நபர்களை பணி அமர்த்தியது சாதனை.

100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணி தள பொறுப்பாளர்கள் 100 நாள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று விதி உள்ளது. 100 நாள் முடிந்த பிறகு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும். அவர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர் அந்த வார்டில் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்து தொடர்ந்து வேலை செய்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு உள்ளது. ஆனால் ஒட்டங்காடு ஊராட்சியில் மூன்று கிளசர் உள்ளது. மூன்று கிளஸருக்கும் மூன்று பணிதள பொறுப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் 100 நாள் முடிந்த பிறகு வேறு ஒருவருடைய வேலை அட்டையை பயன்படுத்தி தொடர்ந்து ஆள்மாறாட்டம் செய்து வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களின் அக்கவுண்டுக்கு செல்லும் பணத்தை எடுத்துத்தர சொல்லி மோசடி செய்கின்றார்கள். வேறு ஒருவருடைய அட்டையை பயன்படுத்துகின்றார். ஆனால் தொடர்ந்து இவர்களே வேலை நடக்கும் இடத்தில் ஆடம்பரம் செய்கின்றார்கள். ஒட்டங்காடு பஞ்சாயத்தில் நுண்ணறிவு புலனாய்வு பத்திரிகை சார்பாக கடந்த 29.07.2022 ம் தேதி ஆய்வு செய்த போது இந்த குற்றங்கள் நடப்பது நமது ஆய்வில் தெரியவருகின்றது. ஏழை மக்களுக்காக மத்திய மாநில அரசு ஒதுக்கும் பணத்தை இதுபோல தனி நபர்களால் கொள்ளையடிக்கப்படுகின்றது. வேண்டாதவர்களை வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லும் இவர்கள், வேண்டிய பணி தள பொறுப்பாளர்கள் செய்யும் தவறுக்கு உடந்தையாக செயல்படுகின்றார்கள்.

  1. நவக்கொல்லைக்காடு பிள்ளையார் குளத்தில் மண் அள்ளி விற்று 4 லட்சம் வரை ஊழல் செய்து பல பத்திரிகையில் செய்தி வந்தது.
  2. ஊமச்சி புஞ்சை அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து தனது வயலுக்கு ரோடு போட்டு BDO வரை புகார் சென்று விசாரணை நடந்தது சாதனை.
  3. மேல ஒட்டங்காடு சாலையோர குடியிருப்புகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவுடன் கூடிய 38 வீடுகள் 38 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இதை 6 மாதத்தில் கட்டி முடிக்க வேண்டும். வீடுகளை முறையான ஒப்பந்ததாரர்களை வைத்து கட்டாமல் பணத்திற்கு ஆசைப்பட்டு தானே கட்டி முடிக்கும் நோக்கத்தோடு 2 வருடங்கள் ஆகியும் கட்டி முடிக்காமல் இருப்பது சாதனை.
  4. ஊமச்சி புஞ்சை அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்காமல் BDO வரை ஆய்வு செய்து பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு கட்டிடம் கட்டப்பட்டது சாதனை.
  5. ஊராட்சி செயலாளரை வேலை செய்ய விடாமல் பொதுமக்களை திரட்டி ஒரு அரசு ஊழியரை அசிங்கப்படுத்தியது சாதனை.
  6. பொதுமக்களின் தேவைகளை கேட்டு யார் தலைவரை கேட்டாலும் எனக்கு தெரியாது என்னால் முடியாது என 4 வருடமாக பல திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பது,
  7. ஊராட்சி மக்கள், யார் ரோடு வேண்டும். பாலம் வேண்டும், சுடுகாடு வேண்டும் என்றால், நான் செலவு செய்த பணமே இன்னும் எடுக்கவில்லை என்று 4 வருடமாக ஒரே பதிலை சொல்லும் சாதனை.
  8. நவக்கொல்லைக்காடு ஆதிதிராவிடர் சுடுகாட்டிற்கு கட்டிடம் கட்டித்தர கேட்கும் இருதரப்பினரிடையும் உள்ள பிரச்சனையை சரிசெய்யாமல் தற்போது வரை சுடுகாடு கட்டிடம் கட்டமால் இருப்பது சாதனை.
  9. குடிநீர் தேக்க தொட்டி மாதாமாதம் சுத்தம் செய்யபடுவதாக ஆர்.டி.ஐ.,யில் தகவல் சொல்லி உள்ளார். வருடத்திற்கு ஒருமுறை கூட சுத்தம் செய்யப்படவில்லை.
  10. (பதிவு செய்யப்படாத) மோட்டார் வாகன உரிமையாளர் சங்கம் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்திற்கு முறைகேடாக மின்இணைப்பு பெற்று தந்துள்ளது. நமது இதழில் ஆக்கிரமிப்பு இடத்திற்கு முறைகேடாக மின்இணைப்பு பெற்றது குறித்தும் செய்தி வெளியிட்டு இருக்கிறோம். நமது கேள்வி ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை எந்த தகுதியின் அடிப்படையில் தனிநபருக்கு ஒதுக்கீடு செய்து உள்ளார்? மேற்படி இடம் கடைவீதியின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது. ஏற்கனவே ஒட்டங்காடு ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு துறைகளுக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் மீட்க முடியாமல் உள்ளது. இந்நிலையில் புதிய ஆக்கிரமிப்புக்கு அனுமதி அளிக்கும் ஊராட்சி மன்ற தலைவரின் தன்னிச்சையான செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது என கூறும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள்.

இந்த வரிசையில் தற்போது நமக்கு வரப்பட்டிருக்கும் புகார் மூன்று கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் நடுமனைக்காடு பெரிய குளத்தின் கரையில் சுகாதாரமற்ற முறைகேடாக அனுமதி இல்லாமல் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதாக பொதுமக்கள் சிலர் கூறியதை அடுத்து இந்த விஷயம் தொடர்பாக நாம் விசாரணை செய்யும் போது அங்கு மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகள் மற்றும் காலாவதியன ரசாயன கழிவுகள் போன்ற அனைத்து விதமான கழிவுகளும் ஒரே இடத்தில் கொட்டப்படுவதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, குப்பைகளை கிளறும் தெரு நாய்களால் அந்த வழியாக தினமும் கருப்பையா உடையார் பள்ளிக்கு செல்லும் பள்ளி குழந்தைகள் பயந்து பயந்து ஓடுவது சாதனை.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்த நிலையில், ஆய்வு செய்து அதிகாரிகள் அந்த இடத்தில் இனிமேல் குப்பைகள் கொட்ட கூடாது என்று அலுவல் ரீதியாக உத்தரவிட்டதாகவும், தெரிய வருகிறது. ஆனால் இன்று வரை அந்த உத்தரவிற்கு மரியாதை இல்லை எவன் என்ன கூறினால் எனக்கென்ன பதவி காலம் முடிவடையப் போகும் நிலையில் இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை என்று மெத்தன போக்கை கடைபிடிக்கும் ஊராட்சி மன்ற தலைவர் தொடர்ந்து அதே இடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு சட்டவிரோதமாக அனுமதி அளித்து வருவதாக தெரிகிறது.

இப்படி பல சாதனைகளை செய்து கொண்டு வரும் ஊராட்சித்தலைவருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஆட்சியர் அலவலகத்தில் செயல்படும் உயரதிகாரிகள் இனிமேலாவது இவரின் சாதனைகளை கருத்தில் கொண்டு ஆட்சியரிடம் விருது வழங்க பரிந்துரைப்பார்களா..?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button