தமிழ்நாடு

குறளும் சிலம்பும்..!

தமிழர்களையும், தமிழினத்தையும் இவ்வுலகுக்கு அறிமுகஞ்செய்து வைத்தது, வான்புகழ் வள்ளுவர் தந்த வான்மறையாம் திருக்குறள். இந்தத் திருக்குறளைப் படைத்த வள்ளுவர் காலம் நாலாயிரம் ஆண்டுகள் இருக்கலாமென்பது சான்றோர்களுடைய கணிப்பு.

நாலாயிரமாண்டுகளுக்கு முன்னால், தோன்றிய வள்ளுவருக்கு நமக்குப் பின்னால், சேர நாட்டில், நெடுஞ்சேரலாதன் என்னும் மன்னருக்கு, இருமகன்கள் பிறப்பார்கள். அதில் மூத்த மகன் செங்குட்டுவன் நாட்டை ஆள்வார். இளைய மகன் இளங்கோவன் புலவருக்குப் படித்துவிட்டு இளமையிலே துறவு பூண்டு, பூம்புகாரில் உள்ள கோவலன், கண்ணகி, மாதவி இவர்களுடைய வரலாறை ஐம்பெரும் காப்பியங்களுள் தலைசிறந்த ஒரு காப்பியமாக சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் எழுதுவார் என்பது எப்படி வள்ளுவருக்குத் தெரியும். இதை வைத்துதான் தெய்வத்திற்கு ஒப்பிட்டு தெய்வ வள்ளுவர் என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள் போலும். நடந்தது. நடந்து கொண்டிருப்பது, நடக்கப் போவது, இந்த மூன்று காலத்தையும், அறம், பொருள், இன்பமென்னும் முப்பாலில் உள்ளடக்கி அறத்தை நிலைநிறுத்தி, தமிழினத்திற்கு, ஒரு வேத நூலாக இந்தக் குறளை வள்ளுவர் படைத்திருக்கிறார் என்பதை எண்ணி தமிழினம் பெருமைப் படவேண்டும்.

அறவழியில் போன வள்ளுவர், ஒரு பெண்ணுடையக் கற்பின் தன்மையினால், ஒன்றை ஆக்கிக் காட்டினார்.

அதாவது (தெய்வந்தொழா அள் கொழுநனைத் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்பது குறள்) கற்பனை தெய்வங்களை வணங்காமல், தன்னுடைய கணவர் தான், தனக்குத் தெய்வம் என்று நினைக்கின்ற கற்புடைய பெண்களுக்காகத்தான் மழை பெய்கிறது என்று கற்பிற்கு உயர்வைக் கொடுத்தார் வள்ளுவர். மறவழியில் போன இளங்கோவடிகள், ஒரு பெண்ணுடைய கற்பின் திண்மையினால் மதுரையை அழித்துக் காட்டினார். இருபுலவர்களும் போன வழி வெவ்வேறாக இருந்தாலும், இறுதியில் இருபுலவர்களும் அன்பு வழியில் வந்து நின்றது பாராட்டுதற்குறிய ஒன்று. (அறத்திற்கு அன்புசால் என்ப அஃதிலார் மறத்திற்கு மக்தே துணை என்பது குறள்)

கற்பு என்பது மின்சாரம் போன்றது. மின்சாரம் ஒளியையும், கொடுக்கும் ஒன்றை அழிக்கவும் முடியும். அதைப் போன்றதுதான் கற்பு என்பதும்.

சி.அடைக்கலம், நெய்வேலி வடபாதி, பள்ளத்தான்மனை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button