தமிழ்நாடு

பெண்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் : – கலெக்டர் ஆர்.லலிதா

மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயிலில் (மே தினம்) தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் க.தி. விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊராட்சி இணை இயக்குனர் முருகண்ணன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்சி அலுவலர் விஜயலெட்சுமி, ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் லலிதா, பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதாமுருகன் கலந்துகொண்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர். அப்போது கலெக்டர் லலிதா பேசும்போது,

கிராமசபை கூட்டங்களில் பெண்கள் அதிக அளவில் வந்து கலந்துகொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கிராமசபை என்பது தங்கள் கிராமத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து தீர்வு காண்பதற்காக நடத்தப்படுகிறது.

அடுத்தடுத்த கிராம சபை கூட்டங்களில் ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்துகொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில் நமது கிராமத்தில் அரசின் சார்பில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிவிக்கப்படுகிறது. அரசின் திட்டங்களை அறிந்து அவற்றை பயன்படுத்தி பெண்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திகொள்ள வேண்டும் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button