தமிழ்நாடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3.5 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது : – மாவட்ட கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3.5 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதாராமு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:-

கொரோனா தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே தான் தமிழக அரசால் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக செயல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3.5 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மாபெரும் கொரோனா விழிப்புணர்வு முகாம் ஆக.1 அன்று முதல் ஆக.7 வரை ஒரு வார காலத்திற்கு தமிழகம் முழுவதும் நடத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பொதுமக்களும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்கும் விதமாக பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறும்படம் எடுக்கும் போட்டியும், விழிப்புணர்வு மீம்ஸ் எழுதும் போட்டியும் நடத்தி சிறந்த படைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகத்தால் நற்சான்றுகளும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

எனவே ஆர்வமுள்ள பொதுமக்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு சிறந்த படைப்புகளை உருவாக்கி ddhspdkcovid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 9345333899 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் இந்நிகழ்வின் இன்னும் ஒரு பகுதியாக 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளை பாராட்டி மாவட்ட நிர்வாகத்தினால் நற்சான்றுகளும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதியில் உள்ள தகுதி வாய்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு 100 சதவீத இலக்கை அடைய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button