போலீஸ் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.

மானூர் மற்றும் சீதபற்பநல்லூர் ஆகிய காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ராஜா அவர்கள் தலைமை காவலர் திரு. அய்யப்பன், முதல் நிலை காவலர் திரு. சரவண சேகர், இரண்டாம் நிலை காவலர் திரு. மலர்மன்னன் ஆகியோரையும்,

மேலும், ராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கடந்த 2010- ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் விரைவாக ஆஜர் படுத்தி எதிரிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதமும் கிடைக்க காரணமாக இருந்த தலைமை காவலர்கள் திரு. கோபால், திருமதி. பத்மாவதி என்பவர்களையும்,

திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். பா.மூர்த்தி, இ.கா.ப., அவர்கள் திருநெல்வேலி சரக காவல்துறை அலுவலகத்திற்கு நேரில் அழைத்து மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button