போலீஸ் செய்திகள்

தாம்பரம் பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைது

தாம்பரம் மாநகர காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சரகத்திலும், தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் A.அமல்ராஜ். இ.கா.ப., மற்றும் காவல் இணை ஆணையாளர் முனைவர் Pa.மூர்த்தி, இ.கா.ப., ஆகியோர்களின் உத்தரவுப்படி “கஞ்சா வேட்டை 4.0” என்ற தலைப்பில், கஞ்சா விற்பவர்கள், உள்ளுர் கஞ்சா வினியோகிஸ்தர்கள் மற்றும் கஞ்சா வழக்கு தலைமறைவு குற்றவாளிகள் ஆகியோர்களை கண்காணித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டி போடப்பட்ட உத்தரவுக்கு இணங்க, மனிதனை மதி மயக்கும் கஞ்சா எனும் போதைப்பொருளை அறவே ஒழிக்க வேண்டுமென்ற உந்துதலினால், தாம்பரம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் அதிவீரபாண்டியன் மற்றும் தாம்பரம் சரக உதவி ஆணையாளர் S.A.சீனுவாசன் ஆகியோர்களின் உத்திரவின் பேரில், T2 குரோம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் N.ராஜசேகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு புலன் வைத்து தொடர் தேடுதல் வேட்டையின் மூலம் தேடிய நிலையில் 04.05.2023 அன்று K.சந்தோஷ்குமார் என்பவரை குரோம்பேட்டை CLC Work ரோடில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகில் உள்ள 5வது மெயின் ரோடு அருகே வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரில் 1கிலோ 150கிராம் கஞ்சா வைத்திருந்தவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் பிடிபட்ட குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button