போலீஸ் செய்திகள்

அன்னூர் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கு.. : குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்த கோவை மாவட்ட போலீசார்..

கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் விஜயகுமார் அவரது மாமனார் ஊரான சொக்கம்பாளையத்தில் விவசாயம் செய்து வருவதால் அங்குள்ள அவரது மாமனார் வீட்டிற்கு 18.05.2024 அன்று அவரது குடும்பத்துடன் சென்றுள்ளார். மேற்படி விஜயகுமார் இடம் வாங்குவதற்காக வைத்திருந்த ரூபாய் 18,50,000/- லட்சம் பணம் மற்றும் 9 சவரன் தங்க நகைகள் பீரோவில் வைத்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு குடும்பத்துடன் சென்றவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்த ரூபாய் 18,50,000/- பணம் மற்றும் 9 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இது சம்மந்தமாக விஜயகுமார்(45) அன்னூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை விரைவாக கைது செய்யும் பொருட்டு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திருமதி.பவானீஸ்வரி, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரிலும், கோவை சரக காவல்துறை துணை தலைவர் திரு.சரவணசுந்தர், இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தலின் பேரிலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி விசாரணை மேற்கொண்டும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டும் தீவிர புலன் விசாரணை செய்ததன் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் அன்பு @ அன்பரசன்(33) என்பவர் மேற்படி வீடு புகுந்து திருடிய குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்து, மேற்படி தனிப்படையினர் அன்பரசனை தனிப்படை காவல்துறையினர்கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், உறவினர் வீட்டிற்கு வந்த அன்பரசன் உறவினரது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு மேற்படி குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து திருடிய சொத்துக்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. மேலும் மேற்படி அன்பரசன் மீது பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 18 குற்ற வழக்குகள் உள்ளன.

மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் சம்மந்தப்பட்ட வீடு புகுந்து திருடிய வழக்கு குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., வெகுவாக பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button