தமிழ்நாடு

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளின்கீழ் கட்டப்படும் வீடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% முன்னுரிமை வீடு.!

கடந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலன் மானியக் கோரிக்கையின்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் வீடு வழங்க கோரியும், நகரங்களில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வழங்க கோரியும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி அடிப்படையில் தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை 12.08.2022 தேதியிட்டு அரசாணை (எண்.24) வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் இரா. ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அந்த அரசாணையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளின் மொத்த ஒதுக்கீட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு 5% வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றுத்திறனாளிகள் அணுகத்தக்க வகையில் தரைத்தள குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வரியம் மூலமாக வீடுகள் ஒதுக்கீடு செய்வதினை கண்காணிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button