போலீஸ் செய்திகள்

நாகையில் 24 மணி நேரமும் நேரடியாக புகார் அளிக்க “உங்கள் எஸ்பி-யிடம் பேசுங்கள்” திட்டம் : அதிரடி காட்டும் எஸ்.பி., ஹர்ஷ் சிங்

நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின்‌ மூலம் மருத்துவமனைக்கு காவல்துறை கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் ஊராட்சி குறுக்கத்தியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கைக்குழந்தை மற்றும் மாமியாருடன் நாகை நோக்கி ஆட்டோவில் சென்றுள்ளார். புத்தூர் ரவுண்டானா அருகே எதிர் திசையில் வந்த இரு சக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் பயணித்தோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் கைக்குழந்தையை வைத்திருந்த பெண்ணை முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைக்க, ஆம்புலன்ஸ் வருகைக்காக காத்திருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் உடனடியாக தனது காரை விட்டு இறங்கி விபத்தில் சிக்கியவருக்கு தண்ணீர் கொடுத்து பரிவுடன் நடந்தவற்றைக் கேட்டறிந்தார். மேலும் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் உடனடியாக காவல்துறை வாகனத்தில் அவர்களை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் காரியாபட்டினம் காவல் சரக தென்புலம் கோவில் திருவிழாவில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஸ்சிங் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், காவல்துணை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் மேற்பார்வையில் குற்றத்தில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 32,320 கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டு அச்சிட பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் மற்றும் ஜெராக்ஸ் எந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான புகார்களை இனி பொதுமக்கள் 24 மணி நேரமும் நேரடியாக தொடர்புகொண்டு தெரிவிக்க உங்கள் எஸ்பி-யிடம் பேசுங்கள்” திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 8428103090 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தொடர்புகொண்டு எஸ்பியிடம் நேரடியாக பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button