தமிழ்நாடு
Trending

செங்கோட்டை- தாம்பரம் இடையே பட்டுக்கோட்டை வழியாக வாரம் 3 முறை புதிய ரயில்

தாம்பரம்- செங்கோட்டை இடையே வரும் ஏப்ரல் 8-ம் தேதி முதல் புதிய ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாட்களிலும் வண்டி எண் 16103 இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டை வந்து அடைகிறது. இந்த ரயில் விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, அம்பை, கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, வழியாக செங்கோட்டை வந்தடைகிறது. 

மறு மார்க்கமாக ஏப்ரல் 10 முதல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் வண்டி எண் 16104 மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு  தென்காசி,  பாவூர்சத்திரம், கடையம், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. 

இந்த ரயிலில் சாதாரண இருக்கைக் கட்டணம் 240 ரூபாயும், படுக்கை வசதி கட்டணம் 435 ரூபாயும், மூன்றாம் வகுப்பு ஏசிக்கு 1,150 ரூபாயும், இரண்டாம் வகுப்பு ஏசிக்கு 1,575 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button