போலீஸ் செய்திகள்

வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய நபர்களை கைது செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்..!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிக்கும் பிரின்சஸ் (49) என்பவர் கடந்த 12.07.2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரது மகனை பார்த்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவிலிருந்த சுமார் 8லு சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்து.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், புலன்விசாரணை செய்து வந்த நிலையில், இன்று (02.08.2024) தனிப்படையினர் கோவை ரஜினிகாந்த் மகன் ரோகன்(24), பெரியசாமி மகன் விஜய் (26), மனோகர் மகன் அபிலேஷ் (29) மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அப்துல் மஜீத் மகன் முபாரக் அலி (29) ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதன் பேரில், ரோகன்(24), விஜய்(26), அபிலேஷ் (29) மற்றும் முபாரக் அலி (29) ஆகியோர்களை கைது செய்தும், மேலும் மேற்படி நபர்கள் சூலூர், கருமத்தம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், மற்றும் பல்லடம் பகுதிகளில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் அவர்களிடமிருந்து மேற்படி வழக்குகளின் சொத்துக்களான 17லு சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனம்- 1 ஆகியவற்றை பறிமுதல் செய்தும், மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button