தமிழ்நாடு

தஞ்சை ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ! : நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை அமல்!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்டலம் நடப்பு கே.எம்.எஸ் 2022-2023 பருவத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு மூன்றாம் பருவம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் தங்கள் நெல்லினை விற்பனைக்காக ஆன்லைனில் பதிவு செய்யும் போது “பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை” புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

மேலும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் கருவி பொருத்தி விரல்ரேகை பதிவு செய்வதன் மூலம் நெல் வியாபாரிகள் உள்நுழையாமல் தடுப்பதுடன் விவசாயிகள் மட்டும் பயன் பெறும் வகையில் நெல்லினை கால தாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்திட முடியும்.

பயோமெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலமும், ஆதார் எண்ணில் பதிவு செய்திருக்கும் கைப்பேசி எண்ணிற்கு ஓடிபி பெறுவதன் மூலமும், விவசாயிகளின் விபரத்தை துல்லியமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த விரல் ரேகை பதிவு மூலம் விவசாயிகளின் சுய விபரங்கள் சரியாக இருக்கிறதா என்று கொள் முதல் நிலையங்களிலேயே சரி பார்த்துக்கொண்டு நெல்லினை விற்பனை செய்துகொள்ள விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button