போலீஸ் செய்திகள்

நுண்ணறிவுப்பிரிவின் அலுவலக பயன்பாட்டிற்கு புதிய மென்பொருள் மற்றும் அலைபேசி செயலி

கோவை மாநகர காவல் துறையின் நுண்ணறிவுப்பிரிவு / சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு ஆகியவற்றின் மூலம் களத்தில் சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து உடனுக்குடன் காவல் உயர் அதிகாரிகளுக்கு பரிமாற்றம் செய்யவும், தகவல்களை ஒன்றிணைத்து, பகுப்பாய்ந்து, சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடிய பொது அமைதியை பாதிக்கக்கூடிய எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நுண்ணறிவுப்பிரிவின் அலுவலக பயன்பாட்டிற்கு தேவையான ஒரு புதிய மென்பொருள் மற்றும் அலைபேசி செயலி ஆகியவற்றை உருவாக்கவும் வேண்டி கோவை மாநகர காவல் ஆணையர் திரு.V.பாலகிருஷ்ணன், இ.கா.ப. அறிவுரையின்படி, சரவணம்பட்டியில் இயங்கி வரும் KG Invicta Services (KGiS) நிறுவனம் மூலமாக ஆக்டோபஸ் (Octopus) என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

26.05.2023ம் தேதி தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் / படைத்தலைவர் டாக்டர்.சி.சைலேந்திரபாபு, இ.கா.ப. அவர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மேற்படி ஆக்டோபஸ் (Octopus) மென்பொருளின் சின்னத்தை (Logo) வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் திரு.V.பாலகிருஷ்ணன், இ.கா.ப., திரு.ஜெயமுரளி பாலகுருசுவாமி, தலைமை நிர்வாக இயக்குநர் (CEO), KGiS, திரு.சந்தோஷ் சதாசிவன், இயக்குநர், KGiS மற்றும் கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்மென்பொருள் செயல்படும் விதம் குறித்து காவல்துறை இயக்குநர் அவர்கள் கேட்டறிந்து, ஆலோசனைகளை வழங்கினார்.

மேற்படி மென்பொருளானது ஒரு முன்னோடி திட்டமாக கோவை மாநகர காவல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மென்பொருள் மற்றும் செயலி மேம்படுத்தப்பட்டு எதிர்வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப் படுத்தப்படும் வாய்ப்புள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button