தமிழ்நாடு

பேராவூரணி ஆதனூர் பெரிய ஏரியின் வரத்து வாய்க்கால் தூர்வாரப்படுமா..?

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள ஆதனூர் முன்னாள் இந்தியன் சர்வதேச விளையாட்டுவீரரும், சமூக ஆர்வலருமான ஆ.சின்னப்பன் முதல்வரின் தனிபிரிவிற்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, பேராவூரணி நீர்வளத்துறை பாசன உட்கோட்டத்தின் ஆதனூர் பெரிய ஏரியின் பாசன வரத்துவாய்க்கால் தூர்வாரப்படமல், தூர்ந்தும் செடிகொடிகள் மண்டியும், காடுபோல் காட்சியளிக்கிறது. பெரிய ஏரி அது நிரம்பி வேம்பன்குளம், அது நிரம்பி கொரட்டூர் குளம் என விவசாயத்திற்காக இவ்வழியே தண்ணீர் செல்கிறது. பெரிய ஏரியை நம்பி சுமார் 1,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்தும் இடுபொருட்கள், இலவச மின்சாரம் என அறிவித்து விவசாயத்தை காத்து வரும் இந்த ஆட்சியில் PWD அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் ஆதனூர் பெரிய ஏரியின் வரத்துவாய்க்காலை இன்னும் தூர்வாரி தராமல் பேராவூரணி PWD அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகிறார்கள்.

எனவே தாங்கள் ஆதனூர் பெரிய ஏரியின் வரத்து வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்து விவசாயிகளின் கஷ்டத்தை போர்கால அடிப்படையில் அடிப்படையில் செய்துதர உத்தரவிட்டு இப்பகுதியின் விவசாயத்தை காக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அவ்மனுவில் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button