போலீஸ் செய்திகள்

மதுக்கூரில் ஆதரவற்ற நிலையில் முதியவர் சாவு : மனிதநேயத்துடன் உடலை அடக்கம் செய்த போலீசாருக்கு பாராட்டு

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள கன்னியாக்குறிச்சி பகுதியில் மாரிமுத்து (வயது70) என்பவர் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்தார். இவருக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிதாபமாக இறந்தார். இவருடைய உடலை யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால் அவருடைய உடலை உரிய இறுதி மரியாதைகளுடன் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதை அறிந்த போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து முதியவரின் உடலை மனிதநேயத்துடன் அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி மதுக்கூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த், ஏட்டு சுரேஷ் உள்ளிட்ட போலீசார் தன்னார்வலர்கள் உதவியுடன் திருவாரூர் விளமல் இடுகாட்டில் முதியவரின் உடலை அடக்கம் செய்தனர். அப்போது அவருக்கு ஈமச்சடங்குகள் செய்யப்பட்டன. ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த முதியவர் இறந்த நிலையில் அவருடைய உடலை மனிதநேயத்துடன் இறுதி சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்த போலீசாருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button