போலீஸ் செய்திகள்

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் ரவுடி வேட்டை : 81 வழக்குகள் பதிவு.. 105 ரவுடிகள் கைது..!

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் (திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை) ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி இருப்பதை உறுதி செய்யவும், பொது அமைதியை நிலைநாட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 09.01.2023 முதல் 13.01.2023 அன்று வரை நடைபெற்ற ரவுடி வேட்டையில் மொத்தம் 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 105 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். (திருச்சி 13, புதுக்கோட்டை 18, கரூர் 11, பெரம்பலூர் 6, அரியலூர் 3, தஞ்சாவூர் 12, திருவாரூர் 21, நாகபட்டினம் 9, மயிலாடுதுறை 12).

கைது செய்யப்பட்ட மற்றும் மாவட்டத்தில் உள்ள 454 (திருச்சி 57, புதுக்கோட்டை 13, கரூர் 15, பெரம்பலூர் 5, தஞ்சாவூர் 60, திருவாரூர் 178, நாகபட்டினம் 101, மயிலாடுதுறை 25) முக்கிய ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு 29 வகையான கொடூர ஆயுதங்கள் (Deadly Weapon) காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் குற்ற வழக்குகளில் நீதி மன்றத்தில் ஆஜராகாமல் பிடிக்கட்டளை (ழிஙிகீ) நிலுவையில் இருந்த 13 (புதுக்கோட்டை 2, கரூர் 1, திருவாரூர் 8, நாகபட்டினம் 2) ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ரவுடிகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க 161 (திருச்சி 7, புதுக்கோட்டை 7, கரூர் 11, பெரம்பலூர் 4, அரியலூர் 33, தஞ்சாவூர் 14, திருவாரூர் 34, நாகபட்டினம் 27, மயிலாடுதுறை 24) ரவுடிகள் மீது நன்னடத்தை பிணை ஆணை பெறுவதற்க்கு சம்மந்தப்பட்ட கோட்டாட்சியர் அவர்களுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டும் அதில் 55 (திருச்சி 7, கரூர் 2, அரியலூர் 8, தஞ்சாவூர் 12, திருவாரூர் 11, நாகபட்டினம் 8, மயிலாடுதுறை 7) ரவுடிகளுக்கு கடந்த 5 நாட்களில் நன்னடத்தை பிணை ஆணை பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே நன்னடத்தை பிணை ஆணை பெற்ற 2 (தஞ்சாவூர் 1, மயிலாடுதுறை 1) ரவுடிகள் பிணை ஆணையை மீறி மீண்டும் குற்ற செயளில் ஈடுபட்ட காரணத்தினால் அவர்களுக்கு பிணை முறிவு ஆணை பெறப்பட்டு சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மத்திய மண்டல காவல் துறை தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் காவல் துறை துணை தலைவர் அவர்களின் மேற்பார்வையில் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் கீழ் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் நடமாட்டங்கள், செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன் மற்றும் அவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகளில் விரைந்து தண்டனை பெறுவதற்கு சிறப்பு படையினர் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

மேலும் பொது மக்களுக்கும் பொதுஅமைதிக்கும் இடையூறு ஏற்படுத்துதல், கட்ட பஞ்சாயத்து, வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்று மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button