தமிழ்நாடு

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய கும்பல் தப்பி ஓட்டம்- : 21 வாகனங்கள் பறிமுதல்..!

திருச்சி மாவட்டம் கல்லணை அருகே கிளிக்கூடு பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரியில் விதிமுறைகளுக்கு புறம்பாகவும், சில அதிகாரிகளின் துணையோடும் அதிகளவு மணல் அள்ளி கடத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

அதன்பேரில், இந்த மணல் குவாரியில் சமீபத்தில் அமலாக்கத் துறையினர் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். பின்னர், இந்த மணல் குவாரி இழுத்து மூடப்பட்டது. இந்நிலையில், அங்கு சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், திருச்சி மாவட்டம் லால்குடி டிஎஸ்பி ரகுபதிராஜா தலைமையிலான போலீசார் மணல் குவாரியை சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

அதனைத் தொடர்ந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 14 டாரஸ் லாரிகள், 7 ஜேசிபி எந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த மணல் கடத்தல் சம்பவத்திற்கு போலீசார் யாரும் துணை போனார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button