தமிழ்நாடு

கோவையில் வாகன ஓட்டிகளுக்காக சிக்னலில் பசுமை பந்தல் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் மாநகராட்சி நிர்வாகம்…

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 100குயை தாண்டி பல்வேறு மாவட்டங்களில் வெயில் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாகவே 100குயை தாண்டி வெயிலானது பதிவாகி வருகிறது.

வெயிலில் இருந்து தற்காத்து கொள்வதற்கு அரசு மற்றும் மருத்துவர்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர், நீர்மோர் பந்தல்களில் மக்கள் தாகம் தணித்து வருகின்றனர்.

வெயிலில் குறிப்பாக வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகராட்சி பகுதிகளில் வெயில் அதிகமாக இருக்கக்கூடிய சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல் அமைக்கும் பணியை துவக்கி உள்ளது.

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் கண்ணப்பன் நகர் சிக்னலில் முதல் கட்டமாக இந்த பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக 10 இடங்களில் இதனை அமைக்க உள்ளதாகவும் தேவைக்கேற்ப பல்வேறு பகுதிகளில் இதனை விரிவுபடுத்த உள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button