போலீஸ் செய்திகள்

வாகன தணிக்கையின் போது குற்றங்களை பதிவு செய்ய கேமராக்கள்… : திருச்சி காவல் ஆணையர் வழங்கினார்..!

திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாக்கவும், ரோந்து பணி செய்யவும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள்.

தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் தமிழக அரசின் உத்தரவின்படி, தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழக அரசால் திருச்சி மாநகருக்கு 12 Body Worn Cameras வழங்கப்பட்டது. (பணியின் போது சம்பவ இடத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்வது). மேற்கண்ட 12 BWC கேமராக்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, திருச்சி மாநகரத்தில் உள்ள 6 போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு தலா 2 வீதம் 12 Body Worn Cameras போக்குவரத்து காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தியும், மேம்படுத்தி சீர்செய்யவும், மேலும் வாகன தணிக்கையின்போது ஏற்படும் இடர்பாடுகளை மேற்கண்ட கேமரா பதிவுகளை கொண்டு சரிசெய்யவும், சாலை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யும்போது உபயோகப்படுத்தவும், போக்குவரத்து நெரிசல் காணப்படும் இடங்களை கண்டறிந்து, கேமரா பதிவுகளை கொண்டு உயரதிகாரிகள் ஆய்வு செய்யும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் வழங்கி, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு இதன் பயன்பாடு குறித்து தக்க அறிவுரைகளை கொடுத்தார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button