போலீஸ் செய்திகள்

போக்சோ குற்றவாளிக்கு 18 வருட கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 30,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கோவை மாவட்டம், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 வயது மற்றும் 11வயது -(2 சிறுமி) 3 சிறுமிகளை‌ பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் பெருமாள்சாமி (72) என்பவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தார். இவ்வழக்கு கோவை மாவட்டம், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.


இவ்வழக்கின் விசாரணை முடிவுபெற்று (04.04.2022) எதிரி பெருமாள்சாமிக்கு 18 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 30,000/-அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண்தலைமை காவலர் 1434 திருமதி. விஜயலட்சுமி ஆகியோர்களை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு. சுதாகர் இ.கா.ப., அவர்கள், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்டர். முத்துசாமி இ.கா.ப., அவர்கள் மற்றும் கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button