தமிழ்நாடு

சிவகங்கையில் சட்டவிரோத கிராவல் மண் குவாரி

திருப்புவனம் தொகுதி வேம்பங்குடியில், 15 ஏக்கர் புஞ்சை நிலத்தில் 10 ஏக்கர் அளவிற்கு மட்டுமே கிராவல் மண் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கிராவல் மண் எடுக்கப்படுவதாகவும், அனுமதி பெறாத பகுதிகளிலும் குவாரி நடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

ஒரு லோடுக்கு 3 யூனிட் என்ற வரம்பை மீறி, 6 யூனிட் வரை மண் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனருக்கு சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button