தமிழ்நாடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவின்றி செயல்படும் விடுதிகளுக்கு சீல்; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பதிவு செய்யப்படாமல் இயங்கும் முதியோர் இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகிய அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகளும் உடனடியாக 30.11.2024 க்குள் பதிவு செய்யப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.