போலீஸ் செய்திகள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஊசி முகாமை பார்வையிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஊசி முகாமை பார்வையிட்டு மருத்துவர்களுடன் ஆலோசித்து காவல் ஆளினர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

இன்று 25.03.2021 காலை சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் முன்கள பணியாளர்களான சென்னை பெருநகர காவல் துறை ஆயுதப்படை பெண் காவலர்கள் , காவல் கட்டுப்பாட்டறை அதிகாரிகள் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சந்தித்து, விழிப்புணர்வு சார்ந்து விவரங்கள் பகிர்ந்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் அவசியத்தை கூறி உற்சாகப்படுத்தி மருத்துவர் மற்றும் செவிலியர்களை சந்தித்து கொரோனா தடுப்பு சார்ந்த நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து காவல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் இணை ஆணையர் திருமதி . S. லெட்சுமி , இ.கா.ப ( தெற்கு மண்டலம் ) துணை ஆணையர்கள் முனைவர் P. சாமிநாதன் , இ.கா.ப ( நவீன காவல் கட்டுப்பாட்டு அறை ) திரு . P. பகலவன் , இ.கா.ப , ( திருவல்லிக்கேணி ) திரு . K. சௌந்தராஜன் ( ஆயுதப்படை ) மற்றும் மருத்துவர்கள் , காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button