போலீஸ் செய்திகள்

கொரோனா நோய் தொற்றால் உயிர் நீத்த தலைமைக் காவலர் திருவுருவப் படத்திற்கு காவல் ஆணையர் மலரஞ்சலி.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24.4.2021 அதிகாலை இறந்த K4 அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக்காவலர் திரு.S.மகராஜன் (த.கா-43419) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் 26.4.2021 அன்று காலை K-4 அண்ணா நகர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைக் காவலர் திரு.S.மகராஜனின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
உடன் கூடுதல் காவல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் திரு மகராஜன் அவர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button