போலீஸ் செய்திகள்

வாகனத் தணிக்கை பணியினை ஆய்வு செய்த காவல் ஆணையர்

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு 24.5.2021 அன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில், கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பராமரிக்காமல் இருந்து வரும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள், சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ, அண்ணாநகர் இரண்டாவது அவென்யூ (புளூ ஸ்டார்) சந்திப்பு மற்றும் கொரட்டூர் பாடி சரவணா ஸ்டோர் அருகில் உள்ள வாகன சோதனை சாவடிகளுக்கு சென்று காவல் குழுவினரின் வாகனத் தணிக்கை பணியினை பார்வையிட்டு, காவல் ஆளிநர்களுக்கு வழங்கப்பட்ட உரிய வழிகாட்டுதல்படி வாகன தணிக்கைகள் நடைபெறுகிறதா எனவும் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button