போலீஸ் செய்திகள்

காணாமல் போன சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்கள்.. : மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன் பாராட்டு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் பணியாற்றக் கூடிய பெண் காவலர்கள் மகாலட்சுமி, நீலாவதி மற்றும் போக்குவரத்து காவல் நிலைய காவலர் கார்த்திக் ஆகியோர் கடந்த 25.07.2021 அன்று துறையூர் பேருந்து நிலையத்தில் பெற்றோரைக் காணாமல் ஒரு பெண் பழ வியாபாரியின் பாதுகாப்பில் தவித்துக் கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம் வரகூரைச் சேர்ந்த பெரியசாமி (35) மற்றும் பிரேமா தம்பதியரின் 3 வயது மகன் வெற்றிவேலை பத்திரமாக மீட்டெடுத்து, சிறுவன் குறித்த தகவலை வாட்ஸ்அப் செயலி மூலம் அனைத்து குழுக்களிலும் பகிர்ந்து சிறுவனின் பெற்றோரை உடனடியாக கண்டறிந்து தகவல் தெரியப்படுத்தினர்.

விசாரணையில் குழந்தையின் பெற்றோர் தங்கள் உறவினர்களுடன் சமயபுரம் கோவிலுக்கு வந்து விட்டு திரும்பிச் செல்கையில் துறையூர் பேருந்து நிலையத்தில் தங்கள் குழந்தையை தவற விட்டது கண்டறியப்பட்டது.

பின்னர் துறையூர் காவல் நிலையத்திற்கு குழந்தையின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் நல்ல முறையில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.


காவல்துறையின் துரித நடவடிக்கைக்கு குழந்தையின் பெற்றோர் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர்.

மேற்படி குழந்தை காணாமல் போன சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை அதன் பெற்றோரிடம் மீட்டு ஒப்படைத்த காவலர்களை மேன்மேலும் சிறப்பாகப் பணி புரிய ஊக்குவிக்கும் வகையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன், இ.கா.ப., அவர்கள் மத்திய மண்டல அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட 3 காவலர்களையும் நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டுக்களை தெரிவித்து, தொடர்ந்து பொதுமக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்யுமாறு கேட்டுக்கொண்டார் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button