போலீஸ் செய்திகள்

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம், POCSO சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் 181 , 1098, 155260 & 112 குறித்து விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள அரசு இராணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திரு.V.பாலகிருஷ்ண இ.கா.ப., காவல்துறை தலைவர், மத்திய மண்டலம், திருச்சி அவர்களின் தலைமையில் 07.12.2021 – ஆம் தேதியன்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம், POCSO சட்டம் பற்றியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண்கள் 181, 1098 & 112 மற்றும் சைபர் குற்றங்கள் இலவச உதவி எண்கள் 155260 குறித்தும் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு “அச்சமில்லை அச்சமில்லை”என்ற பாரதியாரின் பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேற்படி நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) திரு.ஆறுமுகம் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.சத்தியமூர்த்தி, ராணியார் பள்ளியின் முதல்வர் திருமதி. தமிழரசி, புதுக்கோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமதி. லில்லிகிரேஸ், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ரஷியா சுரேஷ், மாவட்ட குழந்தை நல அலுவலர் மாவட்ட சைபர்கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா மற்றும் இராணியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் 350 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button