போலீஸ் செய்திகள்

சூதாட்டம் விளையாடியவர்கள் மற்றும் மது விற்பனை செய்தோர் கைது : கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் காவலர்களுக்கு பாராட்டு

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில்…

உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 22 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 116 மது பாட்டில்கள் மற்றும் 55 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக வெட்டாட்டம் என்னும் சூதாட்டம் விளையாடிய 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சேவல்-2 மற்றும் ரூபாய் 500/- ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button