போலீஸ் செய்திகள்

ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பறிமுதல் ..!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து நாகப்பட்டினம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். மேலும் சரக்கு வாகனத்தின் முன் மற்றும் பின் வந்த காரையும் நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது சரக்கு வாகனத்தில் கோழி தீவனங்களுக்கு இடையில் 2 கிலோ எடை கொண்ட 250 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள், சரக்கு வாகனங்களையும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட தேனியை சேர்ந்த மணிவாசகம், அலெக்ஸ் பாண்டியன் முத்துப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீரங்கேஸ்வரன், திருவண்ணாமலை சேர்ந்த உமாபதி, சீர்காழியை சேர்ந்த சேகர் என்கிற சந்திரசேகர், நாகையை சேர்ந்த சிங்காரவேல் என 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் திருமதி கயல்விழி IPS., அவர்கள் வாழ்த்து தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button