போலீஸ் செய்திகள்

தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலைக்கு ஆட்கள் தேர்வு : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

தமிழக காவல்துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் (ஆண், பெண் மற்றும் திருநங்கை) புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப மனுக்களை இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். வருகிற 8ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

7.4.2022 வரை விண்ணப்ப மனுக்களை அனுப்பலாம். முதன்முதலாக தமிழ்மொழி தகுதி தேர்வு அரசின் உரிய வழிகாட்டுதலின் படி நடத்தப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு தேவைப்படும் உரிய விவரங்களை இந்த உதவி மையங்களில் தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதற்காக 044 – 40016200, 044-28413658, 9499008445, 9176243899 போன்ற சீருடை பணியாளர் தேர்வாணைய கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்பு கொண்டு பேசலாம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button