தமிழ்நாடு

2 பேருக்கு கருணை பணிநியமனஆணை : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

ஊராட்சி ஒன்றிய உதவியாளர்களாகப் பணியாற்றிய இருவர் பணியின்போது உயிரிழந்ததால், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த கா. வலிமுகமது பணியின்போது உயிரிழந்ததால், அவரது வாரிசு இம்ரான் நசீருக்கு ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றிய அ. திலகேஸ்வரன் பணியின்போது உயிரிழந்ததால் அவரது வாரிசு தி. சத்தியமூர்த்திக்கு பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகதத்தில் உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.

பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜி. கருப்பசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தமிழ்ச்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button