போலீஸ் செய்திகள்

காவல்துறை குடும்ப மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி : கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் IPS., தொடங்கி வைத்து உரையாற்றினார்..

மாண்புமிகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் / படைத்தலைவர் முனைவர்.சி.சைலேந்திரபாபு. இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், கோவை மாநகர பிளமேடு பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு காவல்துறை குடும்பத்தில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி “தழைக்கட்டும் நமது தலைமுறை-2022” என்ற தலைப்பில் கோவை மாநகர காவல் ஆணையர் க்ஷி.பாலகிருஷ்ணன். இ.கா.ப., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் முனைவர் சி.சைலேந்திரபாபு. இ.கா.ப., அவர்கள் காணொளிகாட்சி வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றினார்.

மேலும், பலதரப்பட்ட கல்லூரி முனைவர்கள், சிறப்பு பேச்சாளர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கி மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மேற்கு மண்டலத்தில் உள்ள காவல்துறை குடும்ப மாணவ, மாணவியர்கள் – 256 பேர் மற்றும் அவர்களது பெற்றோர்கள் – 357 பேர் மொத்தம் – 613 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேற்படி நிகழ்ச்சியானது காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button