போலீஸ் செய்திகள்

PRANK வீடியோஸ் : பொதுமக்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை : கோவை காவல்ஆணையர் V.பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு

கோவை மாநகர காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன், இ.கா.ப., அவர்களின் உத்திரவின் பேரில் Prank Videos என்ற பெயரில் பெண்கள் மற்றும் முதியோர்களது சம்மதம் ஏதும் இன்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு அவர்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில், வீடியோக்கள் எடுப்பவர்கள் குறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலைய போலீசார் கண்காணித்து வந்த நிலையில், “கோவை 360 டிகிரி” என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்கள் மேற்கண்ட Prank Videos என்ற பெயரில் பொதுமக்களின் சம்மதம் இன்றி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், உடல்ரீதியாகவும், மனரீதியாக துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டு அதை வீடியோ எடுத்து “கோவை 360 டிகரி” என்ற யூடியூப் சேனலில் வீடியா வெளியிட்டதைப் பார்த்து, அதன்பேரில் சைபர் க்ரைம் காவல் நிலைய குற்ற எண். 39/2022 U/s 354D IPC & 4 of TNPHW Act r/w 66E IT Actன் படி “கோவை 360 டிகரி” என்ற யூடியூப் சேனல மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Prank Videos தொடர்பாக தேவையின்றி பொதுமக்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button