போலீஸ் செய்திகள்

திருச்சி பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் விமான கடத்தல் தடுப்பு பயிற்சி

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விமானநிலைய பாதுகாப்பு குழு, பாதுகாப்பு பிரிவு, இந்திய விமானப்படை, தேசிய பாதுகாப்பு குழு, குடியேற்ற பணியகம், சுங்கத்துறையினர், உளவுத்துறை பணியகம், சிறப்பு பணியகம், திருச்சி, மக்கள் தொடர்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகளை உறுப்பினர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்களின் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர்களை கொண்டு இக்கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் தலைமையேற்ற விமானநிலைய குழு உறுப்பினர் தலைவர், பாதுகாப்பு கருதி அடிப்படை தேவைகள் மற்றும் தொழிநுட்ப விபரக்குறிப்பு, தற்போதுள்ள பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்களின் விபரங்களை புதுப்பித்தல், கடந்த முறை நடைப்பெற்ற கூட்டத்தில் விவாதிக்கபட்ட விவரங்களை நடைமுறைப்படுத்தப்பட்டது சம்மந்தமாகவும் மற்றும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஒத்திகை மற்றும் விமான கடத்தல் தடுப்பு பயிற்சிகள் சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது.

விமானநிலைய விரிவாக்க பணிக்கு இடையூறாக இருக்கும் அம்பேத்கர் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியினை அப்புறப்படுத்தவும், அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் / குடிசை மாற்று வாரியம் மூலமாக உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து தருவது குறித்தும், தேசிய நெடுஞ்சாலை 210 விமான ஒடுதளத்தில் அருகாமையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி தரைவழிப்பாலம் அல்லது சாலையின் உயரத்தை குறைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

விமான கடத்தல் ஒத்திகையின்போது தேசிய பாதுகாப்பு குழுவினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து அவர்களையும் வைத்து ஒத்திகை செய்வது என்றும், கூட்டத்தில் சிசிடிவி அதிகமாக வெளிப்பகுதிகளில் அமைத்தால் கடத்தல் செய்பவருக்கும், கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவரையும் எளிதில் கண்காணித்து கடத்தலை தடுக்க முடியும் என்றும் வெளியே வாகன நிறுத்துமிடங்களில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கொண்டு ரோந்து பணியை தீவிரப்படுத்துவது குறித்தும், விமானநிலையத்தின் நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் பகுதியில் காவலர் சாவடி அமைப்பது பற்றியும் விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார்கள். மேலும் விமான கடத்தல் தடுப்பு பயிற்சி பெற்றவர்கள் தங்களுடைய பொறுப்புகளை அறிந்து நல்லமுறையில் செய்துள்ளார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button