போலீஸ் செய்திகள்

ஆன்லைன் குற்றங்களுக்கு 1930 எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் : டிஜிபி சைலேந்திரபாபு

தமிழக காவல் துறையில் பணியாற்றும் 1030 உதவி ஆய்வாளர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.. அத்துடன் ஆன்லைனில் நடக்கும் குற்றவாளிகள் குறித்தும் விரிவாக டிஜிபி எடுத்துரைத்து, எச்சரிக்கை செய்துள்ளார்.

கோவையில் பல்வேறு காவல்துறை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவை வந்துள்ளார்.. கோவை மாநகரில் கவுண்டம்பாளையம், போத்தனூர், சுந்தராபுரம், கரும்புக்கடை ஆகிய 3 இடங்களில் புதிய காவல் நிலையங்களை திறந்து வைக்கிறார்.

அதன் ஒரு பகுதியாக கோவை போத்தனூர் காவல் நிலைய வளாகத்திற்குள் புதிதாக கட்டப்பட்டுள்ள தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தை திறந்து வைத்து டிஜிபி பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழ்நாட்டில் மொத்தம் 1352 போலீஸ் ஸ்டேஷன்கள் இருந்தன.. அதில் 202 மகளிர் காவல் நிலையங்கள் மட்டும் தான் இருந்தன.. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் காவல் நிலையங்கள் அதிகரிக்கப்பட்டு 1574 காவல் நிலையங்கள் இப்போது செயல்பட்டு வருகின்றன.. போத்தனூர் பகுதியில் திறக்கப்பட்ட மகளிர் ஸ்டேஷனில், 8 காவலர்கள் பொறுப்பேற்க உள்ளனர்.

கோவை மாநகரில் அக்டோபர் மாதம் நடந்த சம்பவத்தையடுத்து, கோவை மாநகர காவல்துறையை விரிவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அப்போது, புதிய போலீஸ் ஸ்டேஷன்கள் திறக்கப்பட்டுள்ளன..

துடியலூர் மற்றும் வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனில், இப்போது, கோவை மாநகர காவல் துறையுடன் இணைய உள்ளது. இதன் காரணமாக கோவை மாநகரில் 15 காவல் நிலையங்கள் இருந்த நிலையில், 20 காவல் நிலையங்களாக அதிகரித்துள்ளது.

ஆன்லைன் குற்றங்களுக்கு 1930 எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்… இணைய வழி குற்றங்களை பொறுத்தவரை, பெரும்பாலும் பண மோசடித்தான் அதிகமாக நடக்கிறது.. அதிக பணம் சேர்க்க வேண்டுமென்று ஆசைக்காட்டி, அதற்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களை ஏமாற்றுவார்கள்.. அப்படி யாராவது உங்களை ஏமாற்ற நேர்ந்தால், அல்லது நீங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தால், உடனடியாக 1930 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.

இந்த குற்றங்களில், உள்ளூர் அல்லது இந்தியாவிற்குள் உள்ள குற்றவாளிகளை எளிதாக பிடித்துவிடலாம்.. ஆனால், வெளிநாடு குற்றவாளிகளை பிடிப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.

காவல்துறை சார்பில் மக்களுக்காக “காவல் உதவி” என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. இதன் மூலம் 66 வகையான உதவிகளை பெற முடியும்.. ஆனால் இந்த செயலியை பலரும் பதிவிறக்கம் செய்யவில்லை.. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் செயலிகளாவும் உள்ளது. இது மிகவும் பயனுள்ள செயலியாக இருக்கும்.. . 130 இன்ஸ்பெக்டர்களுக்கு ஓரிரு மாதங்களில் பதவி உயர்வு வழங்கப்படும். 1030 உதவிஆய்வாளர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும்” என தெரிவித்தார்” என்றார் டிஜிபி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button