போலீஸ் செய்திகள்

தாராபுரம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., ஆய்வு

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஷாங் சாய் பணியாற்றி வந்தார். அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பி.சாமிநாதன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இந்த நிலையில் தாராபுரம் காவல் நிலையத்தில் எஸ்.பி.,சாமிநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள், காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்து விசாரித்தார். இந்த ஆய்வின் போது டிஎஸ்பி., கலையரசன், ஆய்வாளர் மணிகண்டன், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்லம் உள்ளிட்டோர் பணியில் இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button