போலீஸ் செய்திகள்

கோவையில் 54 கிலோ கஞ்சா பறிமுதல்… தனிப்படையினரை நேரில் சென்று வாழ்த்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் (06.12.2023) அன்று சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் குளத்தூர் பிரிவு அருகே சென்று சோதனை மேற்கொண்டபோது 5 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மூக்குசாமி மகன் கருப்பசாமி (45)-யை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், நீலாம்பூர் தனியார் ஹோட்டலில் காசாளராக பணிபுரிந்து வருவதாகவும், தனது மேலாளர் நாகராஜ் கூறியதன்படி கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்ததாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மேலும் கருப்பசாமி கொடுத்த தகவலின்படி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் தனிப்படை காவல்துறையினர் விரைந்து சென்று விற்பனைக்காக மற்றொரு இடத்தில் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த 49 கிலோ கஞ்சா என மொத்தம் ரூபாய் 5,40,000/- மதிப்புள்ள 54 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கருப்புசாமி (45)- யை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் மேற்படி வழக்கில் தொடர்புடைய தலைமறைவான நாகராஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்தும், 54 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சூலூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 591 நபர்கள் மீது 447 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 784.431 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button