போலீஸ் செய்திகள்

கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 2 நபர்கள் கைது : 26 கிலோ கஞ்சா மற்றும் 198 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை வருகின்றனர். எடுத்து

இதன் தொடர்ச்சியாக, புனித தோமையர்மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/Anna Nagar) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் எம்.ஜி.ஆர்.நகர், சூளைபள்ளம் என்ற இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு. அங்கு சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த யோகேஸ்வரன், வ/24, த/பெ.சேகர், எரும்புபாளையம், பந்தளூர் தாலுக்கா, நீலகிரி மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், T-4 மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் (02.01.2023) ஆலப்பாக்கம், கிருஷ்ணாநகர் அருகே சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்த ஹரிபிரசாத், வ/22, த/பெமுரளி, ஆண்டாள் நகர் 3வது தெரு, ஆலப்பாக்கம், மதுரவாயல், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 198 டைடல் உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்படி 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட விசாரணைக்குப் பின்னர், (02.01.2024) 2 நபர்களும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button