போலீஸ் செய்திகள்

தலைமைகாவலர் தெய்வத்திரு.பாலமுருகன் அவர்களது குடும்பத்தாருக்கு 1999 பேட்ஜ் சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி

தூத்துக்குடியில் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமான தலைமை காவலர் தெய்வத்திரு. பாலமுருகன் அவர்களது குடும்பத்தாருக்கு 1999 பேட்ஜ் சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாலமுருகன் குடும்பத்திற்கு வழங்கி ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் வடபாகம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் தெய்வத்திரு. பாலமுருகன் என்பவர் கடந்த 11.12.2023 அன்று உடல்நலகுறைவால் காலமானார். மேற்படி பாலமுருகன் அவர்களது குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் தங்களால் இயன்ற நிதியுதவி செய்ய வேண்டும் என்ற கருணையுள்ளத்தோடு, அவருடன் 1999ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதுமுள்ள சக காவலர்கள் ஒன்று திரண்டு உதவும் உறவுகள் 1999 பேட்ஜ் சக காவலர்கள் சார்பாக ரூபாய் 13,81,500/- பணம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 1999 ம் ஆண்டு காவலர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாலமுருகன் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button