போலீஸ் செய்திகள்

கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்த அய்யாவு மகன் ராமச்சந்திரன் (29) என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் திலீப் (19) மற்றும் மருதாச்சலம் மகன் கௌரிசங்கர் (21) ஆகிய இரண்டு நபர்கள் மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி நபர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டும், பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்டு வந்த குற்றத்திற்காக திலீப்(19) மற்றும் கௌரி சங்கர் (21) ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் திரு. கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., அவர்கள் மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகளான திலீப் மற்றும் கௌரிசங்கர் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

‌இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 20 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button