போலீஸ் செய்திகள்

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வீ.வருண்குமார் இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் (சைபர்கிரைம் பிரிவு) அவர்களின் அறிவுறுத்தலின்படியும் திருச்சிராப்பள்ளி மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையம் சார்பில் MIET Engineering கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இணையவழி நிதிமோசடி சம்பந்தப்பட்ட குற்றங்கள் பற்றியும் அக்குற்றங்களிலிருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது பற்றியும், சமூக வலைதள குற்றங்கள் பற்றியும், வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக உபயோகப்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட புகார்களை பதிவு செய்யும் வலைதளமான www.cybercriyme.gov.in மற்றும் M-kavache2 app மற்றும் இலவச தொலைபேசி எண் 1930 பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button