போலீஸ் செய்திகள்

தஞ்சையில் 136 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்..!

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிரசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் மருத்துவகல்லூரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.சந்திரா அவர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படை பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் அவர்கள் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழு அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்கு வைத்திருந்த 136 கிலோ போதைப்பொருட்கள் (கஞ்சா) கைப்பற்றப்ட்டு குற்றவாளிகளான ரவிச்சந்திரன், சுப்ரமணியன், டேவிட் பெர்ணான்டோ மற்றும் அய்யப்பன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button