செய்திகள்தமிழ்நாடுபோலீஸ் செய்திகள்

“உங்கள் துறையில் முதலமைச்சர்” காவலர்கள் குறை தீர்க்கும் முகாம்

சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கான “உங்கள் துறையில் முதலமைச்சர்” – காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் சென்னை பெருநகர காவல் சரகத்திற்குட்பட்ட அனைத்து துணை ஆணையாளர்களுக்கும் (தனிப்பிரிவுகள் உட்பட) சுற்றறிக்கை அனுப்பப்பட்டு காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

02.10.2021 அன்று மாலை 3.00 மணியளவில் எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்கில் தொடங்கி நடைபெற்ற “உங்கள் துறையில் முதலமைச்சர்” – என்ற காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப கலந்து கொண்டு சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களிடமிருந்து மாலை 3.00 மணி முதல் இரவு 10.30 மணிவரை தொடர்ந்து 7 லு மணி நேரம் நேரடியாக காவல் ஆளிநர்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். மேலும் காவல் ஆணையாளர் அவர்கள், சமீபத்தில் வாகன விபத்தில் மரணமடைந்த ஆயுதப்படை முதல் நிலைக்காவலர் ராமச்சந்திரனின் (மு.நி.கா.30460,) மனைவி திருமதி.பாரதியிடம், சக ஆயுதப்படை காவலர்கள் அளித்த ரூ.6 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

மேற்படி குறை தீர்ப்பு முகாமில் சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 1,359 காவலர்கள் கலந்து கொண்டு பணி இடமாறுதல், தண்டனைக்குறைப்பு, ஊதிய முரண்பாடு களைதல், காவலர் குடியிருப்பு வேண்டுதல், காவலர் சேமநல நிதியிலிருந்து மருத்துவ உதவி தொகை பெற்று தர கோருதல் தொடர்பான மனுக்களை அளித்தனர். மேற்படி குறை தீர்க்கும் மனுக்களை பெற்றுக்கொண்ட காவல் ஆணையாளர் அவர்கள், மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் முனைவர் J.லோகநாதன், இ.கா.ப (தலைமையிடம்), துணை ஆணையாளர்கள் L.பாலாஜிசரவணன், (தலைமையிடம்), K.சௌந்தராஜன் (ஆயுதப்படை), R.ரவிச்சந்திரன் (ஆயுதப்படை) S.கோபால், (ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button