போலீஸ் செய்திகள்

டிஜிபி சங்கர் ஜிவால் போட்ட அதிரடி உத்தரவு

காணாமல் போனவர்கள் குறித்த புகார்களை அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட எஸ்பிகளுக்கும், டிஜிபி சங்கர் ஜிவால் சுற்ற‌றிக்கை அனுப்பியுள்ளார்.

காணாமல் போனவர்கள் குறித்து புகார் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் காணாமல் போன நபர்கள் அடிக்கடி சென்று வரும் இடங்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் தேடுதலில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், காணாமல் போனவர்கள் குறித்த புகைப்படங்களை, விசாரணை அதிகாரி மற்றும் உறவினர்களின் தொடர்பு எண்களுடன், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஒட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். புகார் மீது உடனடியாக சிஎஸ்ஆர் ரசீது வழங்கி, 24 மணி நேரத்தில் விசாரித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button